மனமாற வாழ்த்தும்

wishing-abishakram

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்


wishing-abishakram


தந்தையே உன் வயிற்றில்
சுமக்காவிட்டாலும்
காலமெல்லாம் சுமந்தாய்
என்னை உன் நெஞ்சினில்..
கருவறை மட்டும்தான்
உனக்கில்லை
தாயென்று சொல்ல உன்னை..

wishing-abishakram


உன்னை மறந்தாய்
உறக்கம் தொலைத்தாய்
உழைத்தாய், கலைத்தாய்,
வேர்வையில் குளித்தாய்
நாங்கள் நலமாய் வாழவே!

வலிகள் எம்மைத் தாக்கினால்
வலிப்பதென்னவோ உனக்கல்லவா..
துயரங்களால் எம் விழி நனைந்தால்
துடைப்பது உன் விரல்களல்லவா..
சோதனையானாலும்
வேதனையானாலும்
தோல் கொடுக்கும்
தோழன் நீயல்லவா...
உன்னைப் போற்ற
ஓர் நாள் மட்டும் போதுமா...
அனுதினமும்
போற்றப்பட வேண்டும்
உன் புகழ் பூவுலகம்
வாழும் காலம் வரை...!


என்னை வளர்த்து ஆளாக்கிய எனது அருமைத் தந்தைக்கு எனது இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்wishing-abishakram

வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!


Protected by Copyscape DMCA.com Protection Status

wishing-abishakram


Click
Share with your Friends


Fathers Day Wishes Copyright 2023 All Rights Reserved Abishak Ram